நிஜத்தில் ஒரு கஜினி

323
Advertisement

கஜினி படத்தில் நடிகர் சூர்யா செலக்டிவ் அம்னீஷியா கேரக்டர் கொண்டவராக நடித்திருப்பார். அதேபோல், நிஜத்திலும் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

கஜினி படத்தில் தனது ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதை டைரியில் எழுதிவைத்து, மறதி வரும் நேரங்களில் அந்த டைரியைப் பயன்படுத்தித் தனது செயல்களை மேற்கொள்வார்.

அதேபோன்று செய்துவருகிறார் ஜெர்மனியில் வசித்துவரம் டேனியல் ஸ்கிமித் என்ற வாலிபர். 6 வருடங்களுக்குமுன்பு இவருக்கு ஏற்பட்ட கார் விபத்தில் டேனியலின் மூளை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் 6 மணி நேரத்திற்கொருமுறை மறதி ஏற்பட்டுவிடுகிறதாம்.

இந்த நிலையில் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள டேனியல் தனது அனைத்து நிகழ்வுகளையும் டைரியில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அந்த டைரிக் குறிப்பின்படி கிடைத்துள்ள தகவல்கள் தமிழிலில் வெளியான கஜினி படத்தை நினைவுகூர்கின்றன.

6 ஆண்டுகளுக்குமுன்பு நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் டேனியல். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தில் கடைசியில் இருந்துள்ளார் டேனியல். நெரிசல் நீங்கியதும் வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன.
அந்தச் சமயத்தில் டேனியலுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பெரிய கார் ஒன்று 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து மோதியுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனே டேனியலை விமானம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் டேனியலுக்குப் பெரிதாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவர பிசியோதெரபி மற்றும் பேச்சுக்கான சிகிச்சையை எடுத்துவருகிறார். விபத்துப் பாதிப்பால் தன்னுடைய நண்பர்கள், தோழி ஆகியோரை மறந்தே விட்டார் டேனியல்.

இவருக்கு குழந்தை பிறந்ததுகூட நினைவில் இல்லையாம்…..