சிக்கன் கழுவும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்! அலட்சியம் காட்டினால் ஆபத்து

217
Advertisement

உடலில் உள்ள தசைகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின், மினரல்கள் மற்றும் மிகவும் முக்கியமான B12 வகை புரதம் என சிக்கனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிக்க சிக்கன், சுவையாலும் மக்களை கட்டிப்போட்டு வைக்கும் உணவு என்றே சொல்லலாம்.

பொதுவாக சிக்கன் சமைக்கும் முன், இறைச்சியை தண்ணீரில் கழுவி விட்டு சமைப்பது வழக்கம். அப்போது செய்யும் சிறிய தவறினால் food poison ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக பிரிட்டன் உணவு தர முகமை எச்சரித்துள்ளது. சிக்கன் கழுவும்போது அந்த தண்ணீர் நம் ஆடைகளின் மீது தெறிக்க அல்லது கைகளில் பட வாய்ப்புள்ளது.

அப்போது, அதில் உள்ள கேம்பிலோபாக்டர் (Campylobacter), எங்கே அந்த தண்ணீர் படுகிறதோ அங்கே படிந்துவிடும். சிக்கன் சுத்தப்படுத்திய பின் கைகளை சரிவர கிருமிநாசினி போட்டு கழுவாமல் இருந்தாலோ அல்லது அதே ஆடையை அணிந்து இருந்தாலோ இந்த பாக்டீரியா உடலுக்குள் ஊடுருவி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற சாதாரண உடல் உபாதைகளில் தொடங்கி ஐபிஎஸ் (IBS) எனப்படும் குடல் நோய்க்குறி, புற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஜிபிஎஸ் (GBS) எனப்படும் குயிலன் பாரே சிண்ட்ரோம் (Guillain-Barré syndrome)ஆகிய நோய்கள் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

சிக்கனை 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு குறையாமல் சமைப்பது மற்றும் சிக்கன் கழுவும் போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பதால் பாக்டீரியா தொற்றை தவிர்க்கலாம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.