வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு….

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான தகவல் பரிமாற்றங்களுக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதிகளையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனிடையே வாட்ஸ்அப் மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை வாட்ஸ்அப்பின் Two-step verification வசதியில் 6 இலக்க PIN பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு மாற்றாக எழுத்துகள், எண்கள் மற்றும் @, $ போன்ற சிறப்பு குறியீடுகளை உள்ளடக்கிய நீண்ட மற்றும் வலுவான பாஸ்வேர்டை அமைக்கும் வசதி வழங்கப்படுகிறது.

இதனை வாட்ஸ்அப் Passkey என குறிப்பிடுகிறது. எளிதில் யூகிக்கக்கூடிய 123456 போன்ற PIN-களால் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்களை இந்த மாற்றம் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை பயன்படுத்துவோர் ஒன்றுக்கும் மேற்பட்ட Passkey-களை சேர்க்கும் வசதியும் உள்ளது. இதை Settings > Account > Passkeys பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.

மேலும், சேமிக்கப்படாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண உதவும் கூடுதல் தகவல்களும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அழைப்பாளரின் நாடு மற்றும் பொதுவான குழுக்கள் போன்ற விவரங்களை பார்த்து, அழைப்பை ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பதை பயனர்கள் முடிவு செய்ய முடியும். இதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளில் இருந்து பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.

Related News

Latest News