சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள ஏடிஎம்மில் 19 வயது உடைய டேனியல் என்பவர் 1500 ரூபாயை டெபாசிட் செய்வதற்காக ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறமாக ஒருவர் நின்று டேனியலிடம் சிறிது பேச்சை கொடுத்துள்ளார்.
நான் பணம் எடுக்க வரிசையில் இருக்கிறேன் நீங்கள் பணம் டெபாசிட் செய்வதற்காக நிற்கிறீர்கள் என்னிடம் கொடுங்கள் நான் உங்களுக்கு GPay பண்ணி விடுகிறேன் என கூறி அவர் கையில் வைத்திருந்த 1500 ரூபாயை வாங்கிக் கொண்டு போலி ஆப் மூலம் பணம் செலுத்தியது போல் காட்டிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டு விட்டார்.
டேனியல் என்பவர் தனக்கு பணம் வந்தது போல் எஸ்.எம்.எஸ் வரவில்லை ஆனால் அவர் மொபைலில் தனக்கு பணம் வந்தது போல் காட்டியுள்ளார் எப்படி என்று சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய அக்கவுண்டில் செக் பண்ணி பார்த்து உள்ளார்.
அக்கவுண்டில் பணம் வரவில்லை பின்னர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டேனியல் புகார் அளித்தார். இதையடுத்து செம்மஞ்சேரி போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
செம்மஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதேபோல் நூதன முறையில் அதாவது ஏ.டி.எம், மளிகை கடைகள், உணவகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் போலிஆப் வைத்து இது போன்ற நூதன முறையில் பணம் திருடி செல்வதாக தொடர்ச்சியாக பல புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
