இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் மார்ச் 8-ஆம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இன்று காலை லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
“அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது எனது நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது. நேரடியாக இந்த இசை அனுபவத்தை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டும்.
நான் சாதாரண மனிதனை போல தான் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறேன். 82 வயதாகிவிட்டது, இனிமேல் இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்று நினைக்காதீர்கள். நீங்கள் நினைக்கிற அளவுக்குள் நான் இல்லை” என அவர் பேசினார்.