தாய்ப்பால் கொடுக்கும் பெண்களைப் புகைப்படம் எடுத்தால்

418
Advertisement

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களைப் புகைப்படம் எடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தொழிற்கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ஸ்டெல்லா கிரீஸ் வடக்கு லண்டனில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது தனது நான்கு மாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவருக்குத் தெரியாமலேயே யாரோ அவரைப் படம்பிடித்து வெளியிட்டுவிட்டனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு அடைந்த ஸ்டெல்லா கிரீஸ் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முறையிட்டார். பல பெண்களை அழைத்து போராட்டம் நடத்தினார். அவரது நீண்டகாலப் போராட்டத்திற்குத் தற்போது பலன் கிடைத்துள்ளது.

அதன்படி, பொது இடங்களில் பாலூட்டும் பெண்களை அவர்களின் அனுமதியின்றிப் புகைப்படம் எடுப்பது சட்டவிரோதம் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண்கள் மட்டுமன்றி, பெரும்பாலான ஆண்களும் இந்த சட்டத் திருத்தத்தை வரவேற்றுப் பதிவிட்டு வருகின்றனர்.