கேரட் என்பது சுவையாகவும், உடல்நலனுக்கும் மிகவும் பயனுள்ள காய்கறியாகும். தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது கண்கள் ஆரோக்கியமாகவும், சருமம் மென்மையாகவும் இருக்க உதவும். குறிப்பாக, கேரட்டில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும்.
கேரட்டில் கால்சியம், வைட்டமின் கே போன்ற எலும்பு ஆரோக்கியத் தேவையான சத்துக்கள் உள்ளதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
வெறும் கேரட் ஜூஸை குடிக்காமல் அதனுடன் சில பொருட்களை கலந்து குடித்தால் உடலுக்கு இருமடங்கு நன்மை கிடைக்கும். அந்த பொருட்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.
இஞ்சி
கேரட் ஜூஸுடன் சிறிது இஞ்சியை சேர்த்து குடித்தால், செரிமானம் மேம்படும். உடல் அழற்சிகள் குறையும். இதனால் மெட்டபாலிசமும் மேம்படும். இஞ்சி சேர்க்கப்பட்ட ஜூஸ் உடனே குடிப்பது நல்லது.
ஆரஞ்சு பழ சாறு
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த ஆரஞ்சு சாற்றுடன் கலந்து குடிப்பதால், உடல் அழற்சிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறையும்.
Also Read : குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்?
எலுமிச்சை சாறு
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை கேரட் ஜூஸுக்கு அழகான சுவை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
ஆப்பிள் சாறு
செரிமானத்தை நன்றாக செய்லபடுத்தி, உடலை சுத்திகரிக்க உதவும். புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய் அபாயங்களை குறைக்கும்.
Also Read : சாப்பிட்ட உடனே நெஞ்செரிச்சல் வருதா? இதெல்லம் தான் காரணம்
தேன்
கேரட் ஜூஸில் சர்க்கரை விட தேன் சேர்ப்பதால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் மூலம் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
