மத்திய, மாநில அரசுகள் சார்பாக ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும் மானிய விலையிலும் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் மானிய விலையில் இலவசமாகவும் அரிசி, கோதுமை போன்றவை வழங்கப்படுகின்றன. ஆனால் சிலர் வசதி இருந்தும் இவற்றை வாங்கி சென்று விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றை சரி செய்ய அரசு சார்பாக கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
இந்நிலையில் ரேஷன் அட்டைகளில் KYC நடைமுறை என்பது மிக கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதன் படி ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் உள்ள உறுப்பினர்கள் விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில் அந்த ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பம் மானிய விலை பொருட்கள் பெற தகுதி பெற்றதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள்.இந்த சூழலில் தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அதாவது AAY மற்றும் PHH ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், உங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு அரிசி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் உடனடியாக ரேஷன் கடைக்கு சென்று தங்களின் பயோமெட்ரிக் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் ரேஷன் கடைகள் வாயிலாக பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்த பயோமெட்ரிக் பதிவு பணிகளை முடிக்கவில்லை என்றால் வரும் மாதம் முதல் உங்களின் ரேஷன் கார்டுகளில் மானிய விலை பருப்பு, கோதுமை மற்றும் இலவச அரிசி ஆகியவை கிடைக்காமல் போகலாம். மேலும் மகளிர் உரிமை தொகை போன்ற அரசின் எந்த ஒரு சலுகையும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
