Tuesday, July 29, 2025

பவுண்டரி லைன்ல ‘சாகசமா’ பண்றீங்க.., அதிரடி விதியை அறிமுகம் செய்த ICC

காலத்திற்கு ஏற்ப கிரிக்கெட் விதிகளை, அவ்வப்போது ICC மாற்றியமைத்து வருகிறது. T20 தொடர்களால் இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் களத்திற்குள் வந்தாலே, சிக்ஸர் மழை பொழிய ஆரம்பித்து விடுகிறது. இதைத் தடுக்க பீல்டர்கள் எல்லைக்கோட்டுக்கு அருகே, சாகசம் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

பவுண்டரி லைனுக்கு அருகே நிற்கும் வீரர்கள் அந்தரத்தில் தாவி, பந்தை சிக்ஸருக்கு செல்லாமல் தடுத்து மைதானத்திற்குள் தூக்கி எறிந்து, பின்னர் மைதானத்துக்கு உள்ளே வந்து மீண்டும் கேட்ச் பிடிக்கின்றனர். இந்தநிலையில் ICC இந்த பவுண்டரி லைன் Catchக்கு என புதிய விதியை கொண்டு வந்துள்ளது.

இதன்படி இனி வீரர்கள் பந்தை அந்தரத்தில் பறந்து பிடிக்கும்போது, ஒருமுறை மட்டுமே எல்லைக்கோட்டை தாண்ட முடியும். ஒரு பந்தை தடுப்பதற்காக எல்லைக்கோட்டை இரண்டு முறை தாண்டினால் அது சிக்ஸராக அறிவிக்கப்படும். இதேபோல முதல் வீரர் தூக்கிப் போடும் பந்தை, 2வது வீரர் களத்திற்குள் நின்று பிடிக்கும்போது, முதல் வீரர் மைதானத்துக்கு உள்ளே வந்துவிட வேண்டும்.

ஜூன் 17ம் தேதி தொடங்கும் இலங்கை – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இந்த விதியால் இஷ்டத்திற்கு வீரர்கள் இனி, எல்லைக்கோட்டைத் தாண்டி குதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News