நான் செத்துப் பிழைச்சவண்டா…

227
Advertisement

https://www.facebook.com/watch/?v=198956365426465

வடகிழக்கு லெபனான் நாட்டின் ஹெர்மல் நகரில் இறந்துபோனதாகக்
கருதி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஒருவர் மீண்டுவந்தது உறவினர்களை
சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement

இறந்துபோனதாகக் கருதப்பட்ட அந்த நபரை சவப்பெட்டிக்குள்
வைத்து இறுதிச் சடங்கு செய்துகொண்டிருந்தனர். அவரது மனைவியோ
துக்கம்பீறிட சவப்பெட்டி அருகே நின்றுகொண்டு தன் கணவரின் சடலத்தைத்
தொட்டுப் பார்த்து அழுது புலம்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சடலம் நகர்வதையும் மூக்கிலிருந்து சுவாசக் காற்று வந்து
கொண்டிருப்பதையும் உணர்ந்தார். அதைப் பார்த்து சுற்றியிருந்த
உறவினர்களிடம் தெரிவிக்க, துக்கத்திலிருந்த உறவினர்கள் அவரது
நெஞ்சைப் பிடித்து மெதுவாக அமுக்கி, இதயம் சீராக இயங்கச் செய்தனர்.

அதேசமயம், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சவப்பெட்டியிலிருந்த
நபரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த
டாக்டர்கள் உயிரோடு இருப்பதை உறுதிசெய்தனர்.

நல்லா தூங்கிக்கொண்டிருந்த என்னைத் தூக்கிக்கொண்டு
புதைக்கக் கிளம்பிட்டீங்களடா… உங்க அவசரத்துக்கும்
சின்சியாரிட்டிக்கும் அளவே இல்லைடா…
நான் எமனயே பாத்தவண்டா… என்று மனதுக்குள் எண்ணியிருப்பாரோ
அந்த நபர்.