சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது : “திமுக குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் இந்தி படிப்பதாக சிலர் கூறுகின்றனர். யார் என்ன படிக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்ததில்லை. நான் டெல்லியில் இருக்கிறேன். இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை” என அவர் பேசினார்.