தனக்கு 188 குழந்தைகள் இருப்பதாகக்கூறி அரசை ஏமாற்றி
18 கோடி ரூபாயை சுருட்டிய ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில்தான் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்து அரசு, குழந்தைகளை வளர்ப்பதற்காகப்
பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிவருகிறது.
குழந்தை பிறந்ததும், அரசிடம் விண்ணப்பித்துப்
பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின்கீழ் தனக்கு 188 குழந்தைகள் இருப்பதாகக்
கூறி விண்ணப்பித்து, இந்திய மதிப்பில் சுமார் 19 கோடி ரூபாயைப்
பெற்றுள்ளார் மான்செஸ்டர் நகரில் வசித்துவரும் அலி பானா முகமது.
பர்மிங்ஹாம், லண்டனில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள்
உள்பட 5பேரைப் பயன்படுத்தி 70 வெவ்வேறு பெயர்களில் 2007 ஆம்
ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டுவரை இந்தத் தொகையைப் பெற்றுள்ளார்.
இதற்காக அத்தனைக் குழந்தைகளுக்கும் தனித்தனியே கணக்குப்
புத்தகங்களைத் தயார்செய்த அவர், அத்தனைக்கும் ஒரே செல்போன்
எண்ணைத் தொடர்பு எண்ணாகக் குறிப்பிட்டதால், மாட்டிக்கொண்டார்.
ஏற்கெனவே மோசடிக் குற்றங்களுக்காக மூன்றரை ஆண்டுகள் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அலி பானா முகமது போதைப்பொருள்
மற்றும் குடியேற்றக்குற்றங்களுக்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், புதிய குற்றத்துக்கான தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்
அலி பானா முகமது.