சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது முறையாக IPL கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், அணியின் பிளேயிங் லெவனை சிறப்பாக கட்டமைக்க வேண்டும். என்னும் கட்டாயத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். கோப்பையை வென்ற கையோடு ஓய்வை அறிவிக்க வேண்டும் என்பது தான் அவரின் திட்டமாக உள்ளது.
2023ம் ஆண்டுக்கு பிறகு நடந்த 2 IPL தொடர்களும் தோனிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கேப்டனை மாற்றி ‘இங்கி பிங்கி’ போட்டு பார்த்தும் ஒன்றும் விளங்கவில்லை. இதனால் தான் தொடருக்கு நடுவே ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் போன்ற மாற்று வீரர்களை எடுத்து வந்து ஆறுதல் வெற்றியை பெற்றனர்.
தற்போது Trading முறை அமலில் உள்ளது. இதையும் சரியாக பயன்படுத்தி மேலும் சில வீரர்களை அணிக்குள் கொண்டுவர CSK மெகா பிளான் போட்டு வருகிறது. முன்னதாக சஞ்சு சாம்சன், கிளென் மேக்ஸ்வெல், ராகுல் தெவட்டியா, காகிசோ ரபாடா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 5 வீரர்கள் சென்னைக்கு வரலாம் என்று, தகவல்கள் அடிபட்டன.
இதற்காக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுடன் சென்னை பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டது. இந்தநிலையில் சாம்சன், ராகுல் தெவட்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்களையும் Trading முறையில் எப்படியாவது அணிக்குள் கொண்டு வருமாறு, தோனி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பினிஷர் என்று மூவருமே சிறந்த வீரர்கள் என்பதால், இந்த முடிவில் தோனி உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பதிலுக்கு கான்வே, பதிரனா, ருதுராஜ் ஆகியோரை விட்டுக்கொடுக்க சென்னை முன்வந்துள்ளதாம்.