Thursday, May 8, 2025

ராணுவத்தின் நடவடிக்கைகளை நினைத்து பெருமை கொள்கிறேன் – ராகுல் காந்தி

பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், நமது ராணுவத்தின் நடவடிக்கைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேப்போல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியான கொள்கையை கொண்டுள்ளது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தை எண்ணி பெருமைப்படுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest news