நன்றி சொன்னால் தள்ளுபடி தரும் உணவகம்

315
Advertisement

ஹோட்டலுக்குச் சாப்பிடச்செல்வோர் அங்குள்ள பணியாளர்களிடம்
நன்றி என்று சொன்னால், தள்ளுபடி தருகிறது.

விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்றது நம்நாடு. என்றாலும்,
சமீபகாலமாக, விருந்தோம்பல் துறையில் குறிப்பாக,
ஹோட்டல் தொழிலில் இந்தப் பண்பு குறைந்துவருவதாகக்
கூறப்படுகிறது.

இதனால், ஹோட்டலுக்கு சாப்பிடச்செல்லும் வாடிக்கையாளர்கள்
சலிப்புடன் திரும்புவதையும், மறுமுறை அந்த ஹோட்டலுக்குச்
செல்வதைத் தவிர்ப்பதையும் பலர் அனுபவத்திருப்பீர்கள்..

இந்த நிலையைத் தவிர்க்க, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்
நகரிலுள்ள ஓர் உணவகம் புதுவகை சலுகை ஒன்றை வழங்கத்
தொடங்கியுள்ளது.

தங்கள் உணவகத்துக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள்,
தங்கள் ஊழியர்கள் உணவு பரிமாறிய பின், உணவு பரிமாறிய
ஊழியர்களிடம் நன்றி, இந்த நாள் இனிய நாள், தயவுசெய்து,
GOOD AFTERNOON போன்ற சொற்களைப் பயன்படுத்தினால்,
15 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை தள்ளுபடி தருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களும் ஹோட்டல் ஊழியர்களும்
மகிழ்ச்சியடைகின்றனராம்.

இதுபற்றிக் கூறியுள்ள அந்த உணவக உரிமையாளர், ”இது,
வாடிக்கையாளர்கள் மிகவும் கண்ணியமாக இருக்க
ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் முகத்தில்
புன்னகையை ஏற்படுத்துகிறது. பொது மரியாதை மிகவும்
அசாதாரணமானது. அந்தக் கலாசாரத்தை மீண்டும்
கொண்டுவர முயற்சிசெய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

எப்படியோ நல்லது நடந்தால் சரி…