சேலத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை சாலையில் வைத்து சரமாரியாக தாக்கிய குடிகார கணவனை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகர் சூரமங்கலம் ரயில் நிலையம் அருகே, மது குடிக்க பணம் தராததால் மனைவியை கணவன் சரமாரியாக தாக்கினார். கால்களால் எட்டி உதைத்தார். அதனை பார்த்த சிலர், கணவனை தடுக்க சென்றனர். அவர்களை அந்த குடிகார கணவர் மிரட்டி அனுப்பினார். பெண் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய கணவன் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கிருந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
