கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளி

355
Advertisement

https://www.instagram.com/reel/CbD7FoZI_Vk/?utm_source=ig_web_copy_link

கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளியின்
வீடியோவைக் கண்டு பீதியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோர்ட்
மியட் கடற்கரைக்கு அண்மையில் பொதுமக்கள் சென்றிருந்தனர்.
அப்போது திடீரென்று கடலுக்குள் ஒரு சுழல் தோன்றியது.

கடலுக்குள் தோன்றிய அந்த நீர்ச்சுழல் நிலப்பரப்புக்குப்
பரவியபோது, அது சூறாவளியாக மாறி சுழன்றடிக்கத்
தொடங்கியது.

அந்த சூறாவளியால் அங்கிருந்த மேஜைகள், குப்பைத்
தொட்டிகள் பறந்துசென்று வேறிடத்தில் விழுந்தன.
அதேசமயம் சிறிதுநேரம் கனமழையும் பெய்தது.

அதைக்கண்டு அங்கிருந்தவர்கள் குழப்பமும் அதிர்ச்சியும்
அடைந்து, மிரண்டு ஓடினர்.

இந்த சூறாவளியால் மனிதர்கள் எவருக்கும் பாதிப்பு
ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.