மறையாத மனிதநேயம்! இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து…

127
Advertisement

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்ததானம் வழங்குவதற்காக மக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து நேற்று நடந்தது.

ஒரு ரயில் தடம் புரண்டு மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய மருத்துவமனையில் பொதுமக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.