மனிதமும் சமத்துவமும் இங்கேதான்

220
Advertisement

https://www.instagram.com/reel/CVi8y4LjylS/?utm_source=ig_web_copy_link

பணக்காரக் குழந்தையும் வீடற்றக் குழந்தையும் கட்டிப்பிடித்து மகிழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம்தான். அதுவும் திருவிழாவில் பணக்காரக் குழந்தையும் ஏழ்மைவீட்டுக் குழந்தையும் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா…?

அத்தகைய ஒரு காட்சி நிஜமாகவே நிகழ்ந்து காண்போரின் இதயத்தை வருடிவிடுகிறது.
மும்பையிலுள்ள கியான்ஸ் டெடெ என்னும் சிறுவனின் ஆரத்தழுவலை அச்சிறுவனின் தாயார் படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், திருவிழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கே தங்கள் குழந்தைகள், குடும்பத்தினருடன் பெற்றோர்கள் கொண்டாட்டத்தில் மும்முரமாக இருக்க, அவர்கள் மத்தியில் வறிய பெண் ஒருத்தி பொம்மைகள், பலூன்கள் விற்பனை செய்துகொண்டிருக்கிறார்.

அந்தப் பலூன் விற்பனைசெய்யும் தாயின் குழந்தையும், பணக்கார வீட்டுக் குழந்தையும் அங்கே நேருக்கு நேர் சந்திக்கின்றன. வறிய வீட்டில் பிறந்த குழந்தையைப் பார்த்துக் குதூகலமாகிறது கொழுகொழுவென்றிருக்கும் பணக்கார வீட்டுக் குழந்தை.

அதைப் பார்த்த வறிய வீட்டுக் குழந்தை தன் இரு கரங்களையும் நீட்டி நட்பை வெளிப்படுத்தி அருகே செல்கிறது. அடுத்த கணமே இரு குழந்தைகளும் கட்டித் தழுவி மகிழ்கின்றன.

செம்மண் நிலப்பரப்பில் நடைபெற்ற அந்த விழாவைவிட நெஞ்சுக்கினிய இந்தப் பாசக் காட்சி இணையதளவாசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டுவருகிறது.
குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.