மத்திய அரசின் MyGov Corona Helpdesk வாட்ஸ் அப் சேவை கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழைப் பெற சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்க்கைக் கிளிக் செய்தபின், அதற்குள் சென்று சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருந்தது. அல்லது டிஜி லாக்கர், கோவின் இணையதளம் ஆகியவற்றுக்குள் சென்று செல்போன் எண்ணைப் பதிவுசெய்து, சான்றிதழைப் பெற வேண்டியிருந்தது.
ஆனால், தடுப்பூசி செலுத்திய மக்கள் உடனடியாக சான்றிதழைப் பெறும் வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் சான்றிதழைப் பெறும் புதிய வசதியை மத்திய சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ளது.
எளிதான 3 வழிகள் மூலம் மைகவ் கரோனா ஹெல்ப்டெஸ்க் மூலம் பெறலாம். +91 9013151515 செல்போன் எண்ணை சேமித்துக்கொண்டு, இந்த எண்ணுக்கு கோவிட் சர்டிபிகேட் என டைப் செய்து அனுப்ப வேண்டும். அதைத் தொடர்ந்து உடனடியாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
+91 9013151515 என்ற எண்ணை செல்போனில் சேவ் செய்து கொள்ள வேண்டும். இந்த எண்ணுக்கு covid certificate என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். அதன்பின் உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் OTP எண்ணைப் பதிவு செய்தால் சான்றிதழ் கிடைத்துவிடும்.