இட்லி சாம்பார் சாப்பிட்டா உடல் எடை குறையுமா? இது புதுசா இருக்கே!

182
Advertisement

பொதுவாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் salad, smoothies போன்ற dietக்கு மாறி விடுவது வழக்கம்.

அத்தகைய உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டமளித்தாலும், தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது ஏற்கனவே சாப்பிட்டு பழக்கப்பட்ட உணவின் சுவைகளை நாக்கு தேட தொடங்குவதால் மனசோர்வு ஏற்பட்டு பலரும் diet செய்வதையே கைவிட்டு விடுவர்.

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டியாக அறியப்படும் இட்லியை carbohydrates எனக் கூறி உடல் எடை குறைப்பவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள்.

ஆனால், இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் அதுவே உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இட்லியில் அரிசியின் அளவை குறைத்து உளுந்தின் அளவை அதிகரிப்பது மற்றும் ரவை, ஓட்ஸ் இட்லிகளை ஆரோக்கியமான மாற்றாக உட்கொள்ளுவது இட்லியின் ஊட்டச்சத்து மதிப்பை உயர்த்துவதோடு கார்போஹைட்ரெட்களின் அளவை குறைக்கும்.

கலோரிகள் குறைவாக இருக்கும் ஆவியில் வேகவைக்கப்பட்ட இட்லி உடல்நலத்திற்கு உகந்த உணவாக மாறுகிறது. மேலும், சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவதை விட anti oxidants, நார்ச்சத்து மற்றும் புரதசத்துக்கள் கொண்ட காய்கறி சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுவது செரிமான சிக்கல்களை சீராக்க்கி உடல் எடை குறைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்குவதாக உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.