பணியாளர்களின் சேமிப்பை பாதுகாத்து அவசர நிதியியல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதற்காக பிஎஃப் திட்டம் செயல்படும் வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) இருக்கும் பணத்தை திருமணம், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல், கல்வி செலவுகள் போன்ற பெரிய தேவைகளுக்கு எடுத்துக் கொள்ளலாம். அதற்குப்பிறகு, உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
பிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்
EPFO இணையதளத்தில் சரிபார்க்க
EPFOவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, ‘Our Services’ -> ‘For Employees’ -> ‘Member Passbook’ என்பதை கிளிக் செய்யவும். உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைக. உங்கள் பிஎஃப் இருப்பு உடனுக்குடன் காண்பிக்கப்படும்.
SMS மூலம் சரிபார்க்க
பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN ENG’ என SMS அனுப்பவும். இங்கு ENG-இன் பதிலாக உங்கள் விருப்ப மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை பயன்படுத்தலாம் (எ.கா., HIN). உடனடியாக பிஎஃப் பேலன்ஸ் விவரங்கள் SMS மூலம் கிடைக்கும்.
மிஸ்டு கால் மூலம் சரிபார்க்க
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும். சில வினாடிகளில் பிஎஃப் இருப்பு SMS மூலம் அனுப்பப்படும்.
UMANG செயலி மூலம் சரிபார்க்க
UMANG செயலியை பதிவிறக்கம் செய்து, EPFO பகுதியை திறக்கவும். உங்கள் UAN மற்றும் OTP பயன்படுத்தி உள்நுழைந்த பின் பாஸ்புக் மற்றும் பிஎஃப் இருப்பு விவரங்களைக் காணலாம்.
UAN இல்லாமல் பிஎஃப் இருப்பு அறிய
UAN எண் இல்லாவிட்டாலும், உங்கள் அலுவலக மனிதவள அல்லது நிதித் துறையில் கோரிக்கை மூலம் பிஎஃப் அறிக்கையை பெறலாம். முதலாளிகளுக்கு EPFO போர்ட்டலில் பிஎஃப் இருப்பை உருவாக்கும் வசதி உள்ளது.
உங்கள் பிஎஃப் இருப்பை எளிதாக கண்காணிக்க சரியான மொபைல் எண் மற்றும் செயல்படுத்தப்பட்ட UAN எண்ணே தேவையானவை. இதனால் மாதாந்திர சேமிப்பு மற்றும் வட்டி நிலவரத்தை எளிதாக தாமதமின்றி தெரிந்து கொள்ளலாம்.
