Thursday, July 31, 2025

கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி ரூபாய் பரிசா..!!

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய IPL தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போர் பதற்றம் காரணமாக இடையில் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த அணிக்கு விளையாடுவதற்காக தாயகம் திரும்பி விட்டனர்.

இதனால் மீண்டும் வீரர்களைத் தேர்வு செய்து ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன. இந்தநிலையில் IPL தொடரின் மொத்த பரிசுத்தொகை விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கோப்பை வெல்லும் அணிக்கு ரூபாய் 20 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 13.5 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

3வது இடம் பிடித்த மும்பைக்கு ரூபாய் 7 கோடியும், 4வது இடம் பிடித்த குஜராத்துக்கு 6.5 கோடி ரூபாயும் கிடைக்கும். இதேபோல அதிக ரன்களை அடித்து Orange தொப்பி வெல்லும் வீரருக்கு ரூபாய் 10 லட்சமும், விக்கெட் வேட்டையாடி Purple தொப்பியை வெல்லும் வீரருக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

இத்துடன் வளர்ந்து வரும் இளம்வீரருக்கு ரூபாய் 20 லட்சமும், மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு ரூபாய் 10 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். பஞ்சாப் – பெங்களூரு இரண்டு அணிகளுமே இதுவரை IPL கோப்பையை வென்றதில்லை என்பதால், இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News