நடப்பு IPL தொடரில் 35 பந்தில் சதமடித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் வைபவ் சூரியவன்ஷி. 14 வயது சிறுவனான வைபவ் அண்மையில் சென்னைக்கு எதிரான போட்டியிலும் அதிரடி காட்டி, ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தநிலையில் எதிர்கால இந்திய அணியின் நட்சத்திரமாக பார்க்கப்படும் வைபவ், இதுவரை IPL தொடரில் சம்பாதித்த மொத்த தொகை, மற்றும் அவரது சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அதன்படி 7 போட்டிகளில் ஆடியுள்ள வைபவ் ரூபாய் 1 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை IPL தொடர் வழியாக சம்பாதித்து இருக்கிறார்.
தற்போது 8வது படித்து வரும் இந்த 14 வயது குட்டி பையனின், ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூபாய் 2 கோடிவரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.