காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?

155
Advertisement

காற்றிலுள்ள நுண்துகள்களைக்கொண்டே காற்று மாசு
அளவிடப்படுகிறது. இந்த மாசு திடப்பொருளாகவோ,
திரவப் பொருளாகவோ, வாயுப் பொருளாகவோ இருக்கலாம்.

எரிமலை வெடிப்பதால் ஏற்படும் சாம்பல் துகள்கள்
இயற்கையான மாசுவாகக் கருதப்படுகிறது.

மோட்டார் வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் மோனாக்சைடு
வாயு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கந்தக டை
ஆக்ஸைடு போன்றவை செயற்கையான மாசுவாகக் கருதப்படுகிறது.

Advertisement

இந்தியாவில் 70 சதவிகிதக் காற்று வாகனங்கள் வெளியிடும்
புகையால் ஏற்படுவதாக அளவிடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தை
ஒரு நாள் இயக்கும்போது வெளிப்படும் புகையின் அளவு 8 ஆயிரம் கிராம்.

நிலக்கரி சுரங்கம், பெட்ரோலியக் கிணறு ஆகியவற்றிலிருந்து
வெளிப்படும் கந்தக சேர்மங்கள் எரிவதால் உண்டாகும் காற்று மாசு,
பூமியிலுள்ள காற்று மாசுவில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.

பெரிய மின் உற்பத்தி நிலையங்கள், வெடிமருந்து தொழிற்சாலைகள்,
நைட்ரஜன் ஆக்ஸைடு உற்பத்தி நிலையங்கள் ஆகியவை வெளிப்படுத்தும்
மாசுக்களும் காற்றை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நிலக்கரி, மரப் பொருட்கள், இயற்கை எரிவாயு போன்றவை
எரியும்போது வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு வாயுவும்
காற்றை மாசுபடுத்துகின்றன.

80 சதவிகித வாகனங்கள் எரிபொருளை அரைகுறையாக எரித்து
வெளியிடும் புகையில் காற்று கலந்து, மாசு படுகிறது. நச்சுத்தன்மை
கொண்ட இவ்வாயுவை சுவாசித்தால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு,
பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த வாயு நுரையீரலுக்குள் செல்லும்போது சுவாசம்
பாதிக்கப்பட்டு மரணம் நிகழலாம்.

ஏசிகளிலிருந்து வெளிப்படும் குளோரோ புளோரோ கார்பன்,
ஓசோன் அளவைக் குறைக்கின்றன. இதனால் தலைவலி, கண்
எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 16 லட்சத்து 70 ஆயிரம் உயிர்கள்
பலியானதற்கு காற்று மாசு காரணமாக இருக்கலாம் என்று இந்திய
மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
கூறியுள்ளது. காற்று மாசால் இந்தியர்களின் ஆயுள் 3 முதல் 4 ஆண்டு
குறைவாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

ஒரு கன சதுர மீட்டர் காற்றில் எவ்வளவு மைக்ரோ கிராம்
நுண்துகள்கள் உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று
மாசு கணக்கிடப்படுகிறது.

2.5 மைக்ரோ விட்டம்கொண்ட நுண்துகள்கள் பிஎம்(PARTICULATE METRE)
2.5 என்று அழைக்கப்படுகின்றன. இவை அதிக தீங்கை விளைவிக்கும்.
இந்தியாவில் இவைதான் அதிகமாக உள்ளன.

2,5 முதல் 10 வரை மைக்ரோ விட்டம்கொண்ட நுண்துகள்கள்
பிஎம் 10 என்று அழைக்கப்படுகிறது. இவை உடலுக்கு சிறிதளவு
பாதிப்பு ஏற்படுத்தும்.

இதில், காற்றுத் தர எண் ஜீரோவிலிருந்து 50 வரை இருந்தால்
அது பிஎம் 10 ஆகச் சொல்லப்படுகிறது. இந்த அளவு சுவாசிப்பதற்கு
ஏற்ற தரமான காற்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய காற்றை
சுவாசிப்பதால் மிகமிகக் குறைந்த பாதிப்பே ஏற்படுமாம்.
இத்தகைய காற்று நல்ல காற்றாகக் கருதப்படுகிறது.

51 முதல் 100 வரைத் தர எண்ணுள்ள காற்று திருப்திகரமான
காற்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய காற்றை சுவாசித்தால்
எளிதில் நோய் வாய்ப்படக்கூடியவர்களுக்கு சுவாசக் கோளாறு
ஏற்படலாம்.

101 முதல் 200 வரைத் தர எண்ணுள்ள காற்று மிதமான மாசுள்ள
காற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காற்றை சுவாசித்தால்
ஆஸ்துமா போன்ற நோய் ஏற்படலாம்.

201 முதல் 300 வரைத் தர எண்ணுள்ள காற்று மோசமான
காற்றாம். இக்காற்றை சுவாசித்தால் மூச்சுக் கோளாறு ஏற்படலாம்.

301 முதல் 400 வரைத் தர எண்ணுள்ள காற்று மிக மோசமான காற்று.
இதை சுவாசிப்போருக்கு நுரையீரல், இதயப் பிரச்சினைகள் உருவாகும்.

401 முதல் 500 வரைத் தர எண்ணுள்ள காற்று கடுமையான மோசமான
காற்று. மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பவரும் இக்காற்றால்
உடனே நோய் வாய்ப்படுவர்.