‘உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை’ : அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், கடந்த ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 101 வயதான அச்சுதானந்தன், தீவிர சிகிசைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News