சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ராமதாசின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
