Thursday, April 24, 2025

காதலை ‘தியாகம்’ செய்த தோனி.. கோலி, தமன்னாவை ‘பிரிந்தது’ ஏன்?

காதலை ‘தியாகம்’ செய்த தோனி..
கோலி, தமன்னாவை ‘பிரிந்தது’ ஏன்?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்கு மகேந்திர சிங் தோனி, விராட் கோலி இருவரும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். கேப்டனாக தோனி 3 ICC கோப்பைகளை வென்று, தன்னுடைய பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்து விட்டார்.

கேப்டனாக ICC கோப்பைகளை வெல்லாவிட்டாலும், ஒரு  வீரராக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் லெஜண்டுகள் படைத்த அத்தனை சாதனைகளையும், தனியொருவனாக முறியடித்து வருகிறார்.

இப்படியே சென்றால், இன்னும் சில ஆண்டுகளில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளுக்கு, விராட் சொந்தக்காரர் ஆகியிருப்பார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை மணமுடித்த கோலிக்கு வாமிகா, அகாய் என 2 குழந்தைகள் உள்ளனர்.

மறுபுறம் சாக்ஷியை மணமுடித்த தோனிக்கு, 10 வயதில் Ziva என்ற மகள் இருக்கிறார். இந்தநிலையில் திருமணத்துக்கு முன் தோனி மற்றும் கோலிக்கு ஏற்பட்ட காதல் முறிவுகள், மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.

விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தபோது பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனேவுடன் ஏற்பட்ட நட்பு காதலில் முடிந்துள்ளது. ஆனால் சக வீரரும், நண்பருமான யுவராஜ் சிங்கிற்காக தோனி, தீபிகாவுடனான தன்னுடைய காதலை முறித்துக் கொண்டதாகத் தெரிகிறது.

இதேபோல நடிகை ராய் லட்சுமியுடன் காதல் வயப்பட்ட தோனிக்கு, அந்த காதலும் கைகூடாமல் போய்விட்டது. இதுகுறித்து ராய் லட்சுமி, ”தோனியுடனான காதல் ஆறாத ஒரு வடு’ என குறிப்பிட்டு உள்ளார். இது மட்டுமின்றி பிரபல நடிகை அசினுடனும் தோனி டேட்டிங் செய்ததாகத் தெரிகிறது.

இதேபோல விராட் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில், நடிகை சஞ்சனா கல்ராணியுடன் காதல் வயப்பட்டு இருந்தார். இருவரும் சேர்ந்து டென்னிஸ் விளையாடுவது, லாங் டிரைவ் என, ஜோடி பறவைகள் போல சுற்றித் திரிந்தனர். யார் கண்பட்டதோ இந்த காதல் கைகூடாமலே போய்விட்டது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தபோது, நடிகை தமன்னாவுடன் கோலிக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பிரெலிசியன் நடிகை Izabelle Leite வருகையால், தமன்னா-விராட் காதல் பிரேக்கப்பில் முடிந்தது.

2 ஆண்டுகள் விராட்டுடன் டேட்டிங் செய்த Izabelle Leite பின்னர், அவருடனான உறவினை முறித்துக்கொண்டு விட்டார். விராட் குறித்து Izabelle, ”நான் இந்தியாவுக்கு வந்தபோது எனக்கு கிடைத்த முதல் நண்பர் விராட். நாங்கள் 2 வருடங்கள் டேட்டிங் செய்தோம்.

ஆனால் அதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த  நான் விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார். பிரிவுக்கான காரணம் குறித்து அவர், வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news