ஒரு இன்ஸ்டாகிராம் அப்டேட்க்கு இவ்ளோ எதிர்ப்பா?

373
Advertisement

பயனர்களை எப்போதும் ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்காக சமூகவலைத்தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய மற்றும் சுவாரஸ்யமான அப்டேட்களை வழங்கி வருகின்றன.

அண்மையில் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போடுவது தொடர்பான பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது.

Photoக்களை பின்னுக்கு தள்ளி வீடியோக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் இந்த அப்டேட், இன்ஸ்டாகிராமை டிக்டாக் போல மாற்றுவதாக கிம் கர்தாஷியன், கைலி ஜென்னர் போன்ற பிரபலங்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்த நிலையில், இந்த அப்டேட்க்கு எதிராக போடப்பட்ட ஆன்லைன் பெட்டிஷன் ஒன்றில் 229,000 பயனர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மக்களுக்கு வீடியோ பார்க்கும் மனநிலை அதிகரித்து வருவதால், இந்த புதிய அப்டேட் வரவில்லை என்றாலும் இனி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவுகள் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க முடியாது என கூறும் இன்ஸ்டாகிராம் நிறுவன தலைவர் Adam, பயனர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, இந்த அப்டேட்களை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.