மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்படும் ஹிட்லரின் இல்லம்….

163
Advertisement

சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த ஆஸ்திரியாவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம், பொலிஸ் அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்படும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பலவிதமான செய்திகள் வெளிவந்த நிலையில், ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

மேலும், நவ-நாஜிகளின் புனித யாத்திரை தலமாக மாறுவதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய பல வருட விவாதத்திற்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில், நீண்ட சர்ச்சைக்கு பிறகு 2016ஆம் ஆண்டு கட்டாய கொள்முதல் உத்தரவின் கீழ் அரசு, குறித்த கட்டிடத்தை வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2019ஆம் ஆண்டில், அந்த இடம் பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்படும் என்று தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து 1972ஆம் ஆண்டு, உள்துறை அமைச்சகம் அவரிடமிருந்து அந்த இடத்தை வாடகைக்கு எடுக்கத் தொடங்கும் வரை பல தசாப்தங்களாக இந்தக் கட்டிடம் ஜெர்லிண்டே பொம்மருக்கு சொந்தமானது.

ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகள் மையத்தை வாடகைக்கு எடுத்தவர், வீட்டை காலி செய்ததால், மூன்று மாடி வீடு காலியாக இருந்தது.

21.5 மில்லியன் டொலர்கள் செலவில் கட்டுமானப் பணிகள் 2025 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது