மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்தனர். மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவே இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.