நிலத்திற்கு அடியில் வசிக்கும் 20,000  மக்கள்! கோழிகள் மூலம் வெளிவந்த உண்மை..

447
Advertisement

துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  வெடித்த எரிமலையினால் தானாகவே கோபுரம் போன்ற வடிவமைப்பு இயற்கையாகவே உருவாகியுள்ளது.

மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்தில் சூரிய உதயம்  மற்றும் வெப்பகாற்று பலூன் சவாரி போன்றவற்றை அனுபவிக்க அநேகம்பேர் கூடுவார்கள்.

கப்படோசியாவின் மேற்பரப்பு  அவ்வப்போது இடிந்து விழுவதாகவும் அப்படி இடிந்து விழும் மேற்பரப்பிற்கு அடியில் 20,000 மக்கள் வாழ்ந்த நிலத்தடி நகரம் ஒன்று பலநூற்றாண்டுகளாக மறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்பொழுது டெரிங்குயு (Derinkuyu) என அழைக்கப்படும் பழங்கால நகரமான எலெங்குபு(Elengubu) பூமியின் மேற்பரப்பிலிருந்து 85 மீட்டருக்கு மேலான ஆழத்தில் இருந்தது மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்த நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

கிரேக்க-துருக்கியப் போரின்போது அடைந்த தோல்வியை அடுத்து, 1920களில் இந்த நகரம் கப்படோசியன் கிரேக்கர்களால் கைவிடப்பட்டது. சுலேமான் என்பவற்றின் கூற்றின்படி டெரிங்குயு 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்வாசி ஒருவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தன்னுடைய வீட்டை புதுப்பித்தபோது, அவருடைய கோழிகள் தொடர்ந்து காணாமல் போயின. புதுப்பிக்க தோண்டப்பட்ட குழிக்குள் நுழையும் கோழிகள், பின்னர் காணாமல் போய்விடும். இது தொடர்ந்து நடைபெறவே, அந்த இடத்தை அவர் தோண்டியபோது ஓர் இருளடைந்த பாதையைக் கண்டுபிடித்தார்.

டெரிங்குயுவின் இந்த நிலத்தடி நகரத்திற்கு செல்லும் 600 நுழைவுவாயில்கள் தனியார் வீடுகளுக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு இது உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.