உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.