Wednesday, December 17, 2025

பொங்கலை கொண்டாட ஊருக்கு செல்லும் மக்கள் : செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.

சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே மதுரை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கா சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுங்கச்சாவடி நிர்வாகம் இலவசமாக வாகனங்களை அனுமதிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை வைத்துள்ளனர்.

Related News

Latest News