ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபேட்டை, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனிப்பொழிவுடன் குளிர்ந்த காற்று விசியதால், பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற வாகனங்கள் தெரியாததால் வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர். முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர்.