Saturday, April 19, 2025

பீகாரில் பலத்த மழை : 80 பேர் உயிரிழப்பு

பீகாரில் கடந்த 72 மணி நேரத்தில் மின்னல் தாக்குதல் மற்றும் ஆலங்கட்டி மழையால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்குதல், ஆலங்கட்டி மழை போன்ற சம்பவங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் மின்னல் தாக்குதல் மற்றும் ஆலங்கட்டி மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக நாலந்தா மாவட்டத்தில் 42 பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பலியானோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Latest news