Saturday, August 23, 2025
HTML tutorial

கனமழை எதிரொலியாக சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரிக்கு நேற்று 278 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 880 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 450 கன அடி நீரும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல, சோழவரம் ஏரிக்கும் வினாடிக்கு 122 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News