நெல்லை மாவட்டத்திற்கு இன்று (திங்கள்கிழமை) மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் – 0462- 250 1070 மற்றும் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
