தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 07)கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
நாளை அதாவது (அக்டோபர் 08) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பதூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மறுநாள் அதாவது (அக்டோபர் 09) திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.