தமிழகத்தில் நாளை முதல் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதையடுத்து தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
