கடல் நீர்நாய்க்கு வெப்பப் பரிசோதனை செய்தபோது
மனிதர்களைப்போல ஒத்துழைப்பு கொடுத்துப் பல்வேறு
முக பாவனைகளை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கும் தடுப்பூசிக்கும் மனிதர்கள் சிலர்
பயந்து ஓடி ஒளிந்த நிலையில், கடல் நீர்நாய் ஒன்று தைரியமாக
ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. ஏனென்றால், நீர்நாய்கள் கூச்ச சுபாவம்
உடையவை. மனிதர்களைக் கண்டால் வெட்கப்பட்டுக்கொண்டு ஓடி
ஒளிந்து கொள்ளுமாம்.
ஆனால், இந்தக் கடல் நீர்நாய்க்கு டிஜிட்டல் தெர்மாமீட்டர்மூலம்
உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது கூச்சமின்றி
மனிதர்களைப்போல நடந்துகொண்டது,
பெண் ஒருவர் மேற்கொண்ட இந்த சோதனையில் நீர்நாயின்
புத்திசாலித்தனத்தைப் பலர் பாராட்டிவரும் நிலையில், சிலர்
வேறுவிதமாகவும் விமர்சித்துள்ளனர்.
இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், ”மீனை
எதிர்பார்த்து நீர்நாய் வாயைத் திறந்திருக்கலாம். டிஜிட்டல்
தெர்மாமீட்டரைப் பார்த்ததும் அதை சிறிய மீன் எனக் கருதி
உண்பதற்காக வாயைத் திறந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
எப்படியோ……மகிழ்ச்சியாக இருக்கிறது இந்தப் பிராணி.
ஒருவேளை கொரோனா இல்லை. தொற்றவே தொற்றாது
என்று கூறியிருப்பாரோ இந்தப் பெண்…?