Sugar Patients ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

213
Advertisement

அதிக நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில், நீரிழிவு நோய் தொடர்பான சந்தேகங்களுக்கும் முடிவில்லை.

அதிலும் குறிப்பாக ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளை அறவே தவிர்ப்பதே நல்லது என பலரும் சிந்தித்து வரும் நிலையில், நாம் இயல்பாக ருசித்து சாப்பிடும் ஐஸ்கிரீம்களுக்கு சிறந்த மாற்றுக்களை உணவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆறு கிராம் வரை மட்டுமே சக்கரை சேர்க்கப்படும் ஹாலோ டாப் வகை ஐஸ்கிரீம்களை சக்கரை நோயாளிகளும் அளவாக எடுத்து கொள்ளலாம்.

மேலும், யோகர்ட் மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் யாசோ பார்களிலும் சக்கரை மிக குறைவாகவே சேர்க்கப்படுவதால், ஐஸ்கிரீமின் சுவை கிடைப்பதோடு உடல்நலனும் பாதுகாக்கப்படுகிறது.

எனினும், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பும் சக்கரை நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சீராக பராமரிப்பதோடு பிற இனிப்புகளை தவிர்த்து விட்டு ஐஸ்கிரீம் சாப்பிடவேண்டும் எனவும் ஐஸ்கிரீம் வாங்கும் போது கொழுப்பு குறைவான, சக்கரை அளவு குறைவான, கலோரிகள் குறைவாக இருக்கும் ஐஸ்கிரீம் வகைகளையே தேர்வு செய்து அளவாக சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.