குளிர்காலத்தில் கை கொடுக்கும் கொய்யா இலையின் கோடி நன்மைகள்!

262
Advertisement

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணக் கூடிய கொய்யா காய் மற்றும் பழம் சுவையோடு சேர்த்து சத்துக்களும் நிறைந்தது.

கொய்யாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகம் தேவைப்படும் விட்டமின் c, லைகோபீன் போன்ற anti oxidants, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளன.

ஆனால், அதை விட பல மருத்துவ பயன்கள் கொய்யா இலைகளில் ஒளிந்துள்ளன. விட்டமின் C மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ள கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிதளவு இஞ்சி சேர்த்து தேநீராக காய்ச்சி ருசிக்கேற்ப தேன் சேர்த்து பருகினால் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பருவகால காய்ச்சல், சளி, இருமல் குணமாவதோடு சுவாசப்பாதையும் சுத்திகரிக்கப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள இன்சுலின் குறைபாட்டை சரி செய்து இரத்த சக்கரை அளவுகளை சீராக்கும் தன்மை கொண்ட கொய்யா இலைகளை உட்கொள்வதால் நீரிழிவு நோயாளிகள்  சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். கொய்யா இலைகளை அரைத்து facepack போல போட்டு வந்தால் முகத்தில் உள்ள தசைத்தளர்வுகள் நீங்கி இளமையான தோற்றம் சாத்தியமாகிறது.

தலைமுடிக்கு தடவும் போது முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இது மட்டுமல்லாமல் கொய்யா இலை தேநீர் குடித்து வருவது உடல் எடை குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.