கரிய நிறத்தோடு இருப்பவரை இனிமேல் யாராவது, ”அட எரும…” அப்படின்னு திட்டவோ எருமை மாதிரி கருப்பாக இருக்கிறார் என்றோ கூறமுடியாது.
காரணம் என்ன தெரியுமா?
சில மாதங்களுக்குமுன்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளை நிற எருமை பிறந்திருப்பது தெரியவந்துள்ளது.
அல்ஃபினோ என்னும் இனத்தைச் சேர்ந்தது அந்த வெள்ளை நிற எருமை. மருத்துவரீதியாக இதற்கான காரணமாக சொல்லப்படுவது மெலனின்.
உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 10 ஆயிரத்து ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாம்பு, முதலை, முள்ளம்பன்றி, மீன், எலி, புலி, சிங்கம், ஹம்மிங் பறவை, அணில், கொரில்லா, ஆமை, கங்காரு எனப் பல விலங்கினங்களிலும் வெண்ணிறத்தோடு பிறந்துள்ளன.
சிறிதுகாலத்திற்குமுன்புகூட தமிழகத்தில் அந்தியூர் பகுதியில் கரிய நிற எருமை மாடு வெண்ணிற எருமைக் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அந்த அதிசயத்தைத் தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலத்திலும் வெண்ணிறக் கன்றை ஈன்றுள்ளது கரிய நிற எருமை மாடு.
சமூக வலைத்தளங்களில் இந்த வெண்ணிற எருமைக் கன்று பற்றிய தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
பூர்வீக அமெரிக்கர்கள் பலர் வெள்ளை நிற எருமையைப் புனிதமாகக் கருதுகின்றனராம்.
எப்படியோ கருப்பாகப் பிறந்தவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.