நடக்கும் மீனைப் பார்த்திருக்கிறீர்களா?

774
Advertisement

கைகளால் நடக்கும் மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான காமன்வெல்த் அமைப்பு டாஸ்மேனியன் கடற்கரைக்கு அருகில் அரிய இளஞ்சிவப்பு மீனைக் கண்டுபிடித்தது. இந்த மீனின் உடம்பில் கை போன்ற ஓர் அங்கம் உள்ளது. இந்தக் கையைக்கொண்டு அந்த மீன் நடப்பதாகவும் காமன்வெல்த் அமைப்பு தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆங்க்லர் வகை மீன் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மீன் அரிதாகவே காணப்படுகிறது. இந்த ரக மீன்கள் இதுவரை நான்கு முறை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்குமுன்பு 1999 ஆம் ஆண்டில் இந்த ஆங்க்லர் மீனைக் கண்டுள்ளனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்க்லர் மீன் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கடலுக்கு அடியில் ஒரு கேமராவைப் பொருத்தினர் ஆஸ்திரேலியக் கடல் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கேமரா 4 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை படம்பிடிக்கக்கூடியது. சமீபத்தில் இந்தக் கேமராவை ஆய்வுசெய்த ஆராய்ச்சியாளர்கள் 150 மீட்டர் ஆழத்திலேயே கையுள்ள ஆங்க்லர் மீனின் படம் பதிவாகியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர்.

காரணம், இந்த வகை மீன்கள் அழிவின் விழிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுவதுதான்.