மீன் மழை பார்த்திருக்கிறீர்களா?

635
Advertisement

மீன் மழை பொழிந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டெக்சர்கானா நகரில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அன்று மழைபெய்தது. அப்போது மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக்கண்டு ஆச்சரியமடைந்த அங்குள்ள குடியிருப்புவாசிகள் வானிலை ஆய்வு மையத்துக்குத் தகவல்கொடுத்தனர்.

அங்குவந்த வானிலை ஆய்வாளர்கள் இந்த மழையை விலங்கு மழை என்று குறிப்பிட்டனர்.

விலங்கு மழை என்பது தவளைகள், நண்டுகள், சிறிய மீன்கள் போன்றவை மழைபொழியும்போது வானிலிருந்து விழும் அசாதாரண நிகழ்வு ஆகும். எனினும், இந்த அசாதாரண நிகழ்வு டெக்சர்கானா பகுதியில் அடிக்கடி ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா மற்றும் வடமேற்கு செர்பியா பகுதிகளிலும் விலங்கு மழை இதற்குமுன்பு பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பன்றிப் பண்ணையில் தவளை மழைபெய்ததாக அதன் உரிமையாளர் பழைய நினைவுகளைக் குறிப்பிட்டார்.

நம் நாட்டில் அவ்வப்போது ஆலங்கட்டி மழைபெய்ததைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அபூர்வ நிகழ்வாக மீன் மழை பொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.