ரோமங்களுடன் பச்சை நிறப்
பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா?

141
Advertisement

உடல் முழுவதும் ரோமங்கள் நிறைந்த பச்சை
நிறப் பாம்பின் வீடியோ இணையதளவாசிகளைத்
திகைக்க வைத்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இந்த அரிய
வகைப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாம்பு
என்று கருதப்படும் அந்தப் பாம்பின் உடல் முழுவதும்
பாசி படர்ந்திருப்பதுபோல பச்சை நிறத்துடன் உள்ளது.
அதன் உடல் முழுவதும் ரோமம் காணப்படுகிறது.

மிதமான விஷமுள்ள நீர்ப்பாம்புகள் பொதுவாக
அடர்பழுப்பு, கருப்பு நிறத்தில் இருக்கும்.
ஆனால், பச்சை நிறமுள்ள இந்த நீர்ப்பாம்பு பற்றிய
விவரத்தை அறிந்துகொள்ள உயிரியியல் துறை
அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement