தங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கிறீர்களா?

283
Advertisement

தங்க ஐஸ்கிரீம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் விரும்பி சுவைக்கும் பண்டங்களில் முதலிடம் பெறுவது ஐஸ்கிரீம் என்றால், மிகையல்ல. சுவையும் மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் தரும் அற்புதமான உணவுப் பண்டம் ஐஸ்கிரீம்

அமெரிக்கர்கள் ஒவ்வோராண்டும் ஜுலை 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை ஐஸ் கிரீம் தினமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஹுபர் மற்றும் ஹோலி கஃபேயில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க ஐஸ்கிரீம் அனைவரின் வாயிலும் உமிழ்நீரை வரவழைத்துவிட்டது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில், ஜஸ்ட் நாக்பூர் திங்ஸ் என்னும் தலைப்பில் 24 கேரட் தங்க ஐஸ்கிரீம் செய்வது பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்தக் கஃபேயின் ஊழியர் ஒருவர் கோனில் முதலில் ஐஸ்கிரீம் நிரப்புகிறார். பிறகு அதன்மீது தங்கப் படலத்தை வைக்கிறார். இப்போது தங்க ஐஸ்கிரீம் தயார்.

இந்த ஐஸ்கிரீம் மினி மிடாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை 500 ரூபாய்.