சட்டசபை ‘ஷூட்டிங் ஸ்பாட்’ ஆக மாறிவிட்டதா?…உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தார். கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகள் அனைத்தும் முன்னதாகவே தயாரிக்கப்பட்ட “ரிகர்சல்” போல இருப்பதாக அவர் கூறினார். சட்டசபையில் முதலமைச்சர் விஜய் “ஆக்சன்” என்று சொன்னவுடன் நடித்ததைப் போல பேசியதாகவும் அவர் விமர்சித்தார்.

சட்டசபை அமர்வு ஒரு ஆடியோ அல்லது டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வைப் போல இருந்ததாகவும், அரசியல் விவாதத்தை விட நாடகத் தன்மை அதிகமாக இருந்ததாகவும் உதயநிதி தெரிவித்தார். மேலும், நான் முதல்வன் திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி, 6 சிலிண்டர் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற முக்கிய திட்டங்களுக்கு முதலமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், முதலமைச்சர் முழுக்க முழுக்க சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வகையிலான பேச்சுகளையே முன்னிறுத்துவதாகவும், சட்டசபையை ஒரு நடிப்பு மேடையாக பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார். சபாநாயகர் இயக்குநராக செயல்படுவதாகவும், சட்டசபை ஒரு “ஷூட்டிங் ஸ்பாட்” போல மாறிவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவின் ஒரு பிரிவினரை மட்டும் முதலமைச்சர் விஜய் சந்தித்தது ஏன் என்பதற்கும் விளக்கம் தேவை என வலியுறுத்தினார். அவரது பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News