87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வருக்கு குவியும் வாழ்த்துகள்

343
x-cm
Advertisement

அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 10-ம் வகுப்பு பாஸ் செய்துவிட வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.

இவர் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்காதவர். ஒரு ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருந்த சவுதாலா, 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கிலப் பரீட்சை மட்டும் எழுதமுடியவில்லை.

அதனால் அவர் 12-ம் வகுப்பு தேர்வை எழுதியபோதும் அதன் முடிவை அரியானா பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்திவைத்துவிட்டது. அதனால், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 10-ம் வகுப்பு ஆங்கிலத் தாளை எழுதிய சவுதாலா, 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றதால் ஒரே நேரத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ளார்.